குழந்தை பிறப்பதற்கு முன்

கவனிக்க வேண்டிய பதிவு : குழந்தை வளர்ப்பில் டிப்ஸ்

நம் குழந்தைகளை எதிர்காலத்தில் வல்லவர்களாக, நட்ச்சத்திரங்களாக மாற்ற ஒரு கட்டிடத்தின் அடித்தளம் எப்படி உறுதியாக அமையவேண்டுமோ அது போல குழந்தையின் முதல் 5 வயது மிகவும் முக்கியமானது. இந்த வயதில் அவர்களை அறிவாளிகளாக மாற்ற அடித்தளம் அமைக்க வேண்டும். இதற்காக சில பயிற்சிகளை இந்த வலைதளத்தின் பயிற்சிகள் பக்கத்தில் கொடுத்துள்ளேன். இவை பற்றிய விரிவான பயிற்சியை பெற அணுகவேண்டிய முகவரி

natchatthirangal@gmail.com

செல்பேசி எண் - 9176967377


மேலும் குழந்தையின் வளர்ச்சி என்பது மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி ஆகிய இரண்டையும் சார்ந்தது ஆகும். எனவே நாம் இரண்டிலும் கவனமாக இருத்தல் அவசியம். குழந்தை பிறப்பதற்கு முன் நாம் சத்தான உணவை உட்கொள்வதன் மூலம் நம் உடல் ஆரோக்கியம் மட்டும் அல்ல குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் பெருந்துணை புரிகிறது என்பதை நாம் உணர வேண்டும்.

வாழ்க வளமுடன் 

நாம் முன்னே சொன்னது போல் குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை பிறந்த பிறகு கவனித்தல் மட்டுமல்ல. குழந்தை பிறப்பதற்கு முன்னால் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் குழந்தை கருவுட்ற்ற காலம்தொட்டு நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் கருவுற்றிருகிறோம் என்று அறிந்தவுடன் ஒரு நல்ல மருத்துவரை அணுகி அவர் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி போட்டுகொள்வது, சத்து மாத்திரைகளை எடுத்துகொள்வது, நல்ல சத்தான உணவு, காய், பழ வகைகளை உண்பது என்று நாம் நம்மை மாற்றிகொல்வதுடன், அவர் அறிவுரையின் பேரில் அவரிடம் சென்று அவ்வப்போது முருத்துவ பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும். இவை எல்லாம் நம் குழந்தை ஆரோக்கியமாக இருக்க உதவும்.

நாம் நம் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியத்தை மட்டும் கொடுத்தால் போதாது. இதையும் தாண்டி அவர்களை நல்ல மனிதர்களாக, அறிவாளிகளாகவும் ஆசைபடுகிறோம் அல்லவா? அப்படியானால் நாம் கிழ்கண்டவற்றையும் செய்ய வேண்டும்.

  • நாம் இருக்கும் சுற்றுசூழல் அமைதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த நேரமும் கத்தி சத்தம் போட்டுகொண்டிருந்தால் குழந்தையும் நாமும் இப்படித்தான் கத்தி சண்டை போட வேண்டும் என்று நினைத்துக் கொள்ளும்.
  • கடினமான வேலைகளை தவிர்த்தல் நலம். குறிப்பாக முதல் 3 மாதங்களுக்கு கடின வேலைகளைத் தவிர்த்தல் மிகவும் நலம் தரும்.
  • இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதை 5 மாதங்களுக்கு மேல் தவிர்த்தல் நலம் பயக்கும்.
  • நாம் கருவுற்றிருக்கும் தாயின் முன்னால் குடிக்கவோ, சிகரெட் பிடிக்கவோ கூடாது. வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என்ன தெரியபோகிறது என்று நினைக்காமல் குழந்தை பிறந்தவுடன் எப்படி நடந்துகொல்வோமோ அப்படியேதான் தாயின் வயிற்றில் இருக்கும் போதும் நடந்து கொள்ள வேண்டும். இவை பிற்காலத்தில் நம் குழந்தை சிகரெட் பிடிப்பது, குடிப்பது போன்ற பழக்கங்களை செய்யாமல் காப்பாற்றும்.
  • தாய் 5 மாதங்களுக்குப் பிறகு முடிந்தவரை பிறரை குற்றம் சொல்வது, கோபப்படுவது, பிறறிடம் சண்டையிடுவது போன்றவற்றைச் செய்யாமல் எல்லோரிடமும் அன்பாகவும், அனுசரணையாகவும் நடந்து கொண்டால் குழந்தை பிறந்தவுடன் தானும் பிறறிடம் அன்பாகவும், அனுசரணையாகவும் நடந்து கொள்ளும்.
  • முடிந்த வரை தாய் டிவி (தொலைக்காட்சி பெட்டியை) பார்க்காமல் நல்ல புத்தகங்கள்(கடவுளைப் பற்றிய கதைகள், நம் நாட்டு சாதனையாளர்களின் கதைகள், அவர்களின் வாழ்கை வரலாறுகள், அவர்களின் வெற்றியின் இரகசியங்கள் போன்றவற்றை படித்தால் பிறக்கும் குழந்தையும்  ஒரு வெற்றியாளனாக திகழ அதிக வாய்ப்பு இருக்கிறது.
  • முடிந்தவரை சண்டைகாட்சிகளைத் தவிர்த்து இனிமையான பாடல்களை கேளுங்கள், சந்தோழமான நகைச்சுவை காட்சிகளைப் பாருங்கள்.
  • அவன் வெளி உலகத்தை பார்க்கும் முன்னரே இந்த உலகம் மிக இனிமையானது என்று உங்கள் குழந்தைக்கு காட்டுங்கள். அவன் பிற்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று நீங்கள் ஆசைபடுகிறீர்களோ அவற்றை பற்றி நீங்கள் மற்றவரிடம் பேசுங்கள், அவற்றை பற்றி படியுங்கள். உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும்.

பலருக்கும் நாங்கள் சொல்வதில் இருக்கும் உண்மை புரிந்தாலும் வயிற்றில் இருக்கும் குழந்தை உங்கள் நடவடிக்கைகளை, பேச்சை காது கொடுத்துக் கேட்டுகொண்டிருக்கும் என்று நாங்கள் சொல்வதை ஏற்றுகொள்வதில் சற்று தயக்கம் இருக்கலாம்.

நாங்கள் சொல்லும் ஒரு சிறிய விழயத்தை நீங்கள் செய்து பாருங்கள். கருவுற்றதில் இருந்து 8 மாதங்கள் முடியும் தருவாயில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு 2 நிமிடங்களோ அல்லது 5 நிமிடங்களோ குழந்தையுடன் உரையாடுங்கள்.ஒரு 15 நாட்கள் கழித்து சரியாக அந்த நேரம் ஆனவுடன் நீங்கள் குழந்தையுடன் பேச மறந்தாலோ அல்லது நிறுத்திவிட்டாலோ குழந்தை தன் தாயின் வயிற்றில் அசைவதை(எட்டி உதைப்பதை) தாய் உணரலாம். இதைத் தாங்கள் உணர்வதின் மூலம் நாங்கள் கூறுவதில் உள்ள உண்மை உங்களுக்கு புரிவதோடு நிறுத்திக்கொள்ளாமல் நாங்கள் மேலே சொன்னவற்றையும் குழந்தை மேலும்  வளர வளர  தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நாங்கள் கூறியவற்றையும் நீங்கள் பின்பற்றி தங்கள் குழந்தைகளை  மேதைகளாக்குங்கள்.

இவற்றைப் பற்றியும் இந்த வலைத்தளத்தைப் பற்றியும் பிறருக்கும் கூறி  ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உதவுங்கள்.

வாழ்க வளமுடன்.

மேலும் இவை போல் விரிவான தகவல்கள் பற்றி அனைத்தையம் அறிந்து கொள்ள அணுகவும்  e -mail விலாசம்

natchatthiriangal@gmail.com
செல்பேசி எண்  - 9176967377

இவற்றை தாங்கள் அனுபவிப்பதோடு பிறருக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயன் பெற வேண்டுகிறோம். மேலும் தங்களின் மேலான கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன.

வாழ்க வளமுடன்

மேலும் தங்களின் பெயர் குழந்தை வளர்ப்பில் டிப்ஸ் பகுதியில் இடம் பெற தங்களுடையமேலான, அனுபவபூர்வமான, சிறந்த, உபயோகமுள்ள பல டிப்ஸ்-களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை மற்றவர்களுக்கும் பயன் அளிக்கும் அல்லவே? டிப்ஸ் தெரிவிக்க வேண்டிய முகவரி 


natchatthirangal@gmail.com


வாழ்க வளமுடன்