பயிற்சிகள்

கவனிக்க வேண்டிய பதிவு : குழந்தை வளர்ப்பில் டிப்ஸ்

நம் குழந்தைகளை எதிர்காலத்தில் வல்லவர்களாக, நட்ச்சத்திரங்களாக மாற்ற ஒரு கட்டிடத்தின் அடித்தளம் எப்படி உறுதியாக அமையவேண்டுமோ அது போல குழந்தையின் முதல் 5 வயது மிகவும் முக்கியமானது. இந்த வயதில் அவர்களை அறிவாளிகளாக மாற்ற அடித்தளம் அமைக்க வேண்டும். இதற்காக சில பயிற்சிகளை கீழே கொடுத்துள்ளேன். இவை பற்றிய விரிவான பயிற்சியை பெற அணுகவேண்டிய முகவரி

natchatthirangal @gmail.com

செல்பேசி எண் - 91769 67377


வாழ்க வளமுடன் 

நம் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதுடன் நல்ல  அறிவாளியாக, புத்திசாலியாக, நல்லவர்களாக, இக்காலத்திற்கு ஏற்றாற்போலவும் வளர்ப்பது எப்படி என்பதையும், அதை எங்கிருந்து, எப்பொழுதிருந்து ஆரம்பிப்பது என்பது பற்றியும் விரிவாக இந்த வலைதளத்தில் விவாதித்து வருகிறோம்.

தற்காலத்தில் மிக முக்கியமானதும், பெரும்பாலோர் ஆலோசனை கேட்டு மருத்துவரை அணுகுவதுமான ஒரு குறை என்னவென்றால், குழந்தைகள் 2 வயதாகியும் இன்னும் பேசவில்லை என்பது தான். இதற்க்கு மிக முக்கியமான காரணம் தற்சமயம் தனிக்குடித்தனங்கள் பெருகி வருவது தான் என்று சொல்லப்பட்டாலும், பெற்றோரும் குழந்தை தானே அவனுக்கு ஒன்றும் தெரியாது என்று அந்தக் குழந்தைகளிடம் பேசாமல் இருப்பதும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

நாம் நம் குழந்தைகளை ஒன்றும் தெரியாதவர்களாக நினைக்காமல் பெரியவர்களாக, எல்லாம் தெரிந்தவர்களாக நினைத்துக் கொண்டு அவர்களிடம் உரையாடினால் அவர்களின் கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகரிக்கும். இதனால் அவர்கள் விரைவில் பேச ஆரம்பிப்பார்கள்.

மேலும் குழந்தைகளுக்கு காது நன்றாக கேட்கும் பட்சத்தில் இதில் பயப்பட வேண்டியது ஒன்றுமில்லை என்று மருத்துவர்கள் கூறினாலும் நம் குழந்தையின் கற்கும் திறன் சற்று பின் தங்கிய நிலையில் இருப்பதை நாம் மறுக்கவோ, மாற்றவோ முடியாது. இவற்றை  எல்லாம் களைந்து, நாம் நம் குழந்தையோடு தனியாக இருந்தாலும், குழந்தையோடு பேசிக்கொண்டே இருப்பதன் மூலம் குழந்தையை மிக விரைவில் பேச தூண்டுவதுடன் அவர்களை நாம் மிகப் பெரிய  மேதைகளாக்கலாம். 

அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வதோடு மட்டும் நிறுத்தாமல் அவர்களுக்கு அனைத்தையும் கற்றுத்  தரவேண்டியதும் நம் கடமை. நம்மில் பலர் நம் குழந்தைகளிடம் சிறு வயது முதல் "நீ  IAS-ஆக வேண்டும், நீ மருத்துவராக வேண்டும், நீ பொறியாளர் ஆக வேண்டும்" என்று சொல்வதோடு நிருத்திகொள்கிறார்கள் இதனால் குழந்தை வளர வளர வேறு ஒருவர் வேறு ஒன்றைச் சொன்னவுடனே தன்னுடைய சிந்தனையை  மாற்றிகொள்கிறது. மருத்துவர் என்றால் யார்? IAS-அதிகாரி என்றால் யார்?, தாங்கள் ஏன் தங்கள் . குழந்தை  அவ்வாறு  மாற வேண்டும் என்று நினைகிறீர்கள் அல்லது விரும்புகிறீர்கள்,குழந்தைகள் மாறினால் வருங்காலத்தில்  எந்த அளவுக்கு  முக்கியத்துவமும், மரியாதையும் கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம்   குழந்தையுடன் தெளிவாகக் கூறி  அவற்றைப் பற்றி அவர்களுடன் விவாதிக்க  வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தையின் ஆழ் மனதிலும் தான் தன பெற்றோர் நினைப்பது போல் மாற வேண்டும் என்கிற ஒரு ஆவல் அதிகரித்து, நம் விருப்பத்தை நிறைவேற்றுவான். இது நமக்கு எவ்வளவு சந்தோழத்தை தரும் என்று நான் சொல்லி தெரிவதில்லை. நாம் குழந்தை தானே  அவர்களுக்கு என்ன தெரியும் என்று நினைக்காமல் அவர்களுக்கும் எல்லாம் தெரியும் என்கின்ற நினைப்போடு குழந்தையோடு பேசுவது எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

இதனுடன் நாங்கள் கீழே கூறியுள்ளபடி அந்தந்த வயதுக்கு ஏற்றாற்போல் அந்தந்த வயதில் அவர்களுக்குக் பயிற்ச்சியை கொடுத்து அவர்களை திறமையானவர்களாக, புத்திக் கூர்மையுள்ளவர்களாக, அறிவாளிகளாக, ஜாபகசக்தியுள்ளவர்களாக மாற்றியமைத்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்.

பயிற்சி என்றவுடன் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் எங்கள் வழிகாட்டுதலை பின்பற்றி  நாங்கள் கூறும் படங்களை(Videos) குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 2 அல்லது 3 முறை காட்டினால் சில நாட்களுக்குப் பின்னர் குழந்தை நீங்கள் அந்த புகைப்படத்தை காட்டியவுடன் நீங்கள் கூறாமலே அந்த  புகைப்படத்தில் உள்ள படத்தின் பெயரைக் கூறிவிடும்.

நாங்கள் இந்த வலைதலத்தில் சில எடுத்துக்காட்டுகள் தான் கூறியுள்ளோம். சில தலைப்புகள் தான் கூறியுள்ளோம். இது போல விரிவான பல தலைப்புகளில் இன்னும் விரிவான பயிற்சியை பெற எங்களை எங்களது e -mail -ல் தொடர்புகொள்ளவும். எங்களது விலாசம்

natchatthirangal@gmail.com 


இந்த வீடியோக்களை  குழந்தைகளுக்கு காண்பிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:-

  • உங்கள் கம்ப்யூட்டர் டேபிள்-ஐ சுத்தமாக வைக்கவும். இது குழந்தையின் கவனம் வேறு எதிலும் திரும்பாமல்  பார்த்துக் கொள்ளும்.
  • அருகில் எந்த விளையாட்டு பொம்மையும் வேண்டாம். ஏனெனில் இவை குழந்தையின் கவனத்தை திசை திருப்பகூடியவை .
  • கீழே உள்ள சில வீடியோக்களில்  உள்ளது போல தங்கள் குழந்தையை தங்களின் மடி மீது அமர்த்திகொண்டு  குழந்தையிடம் கொஞ்சிப் பேசுங்கள்.
  • இந்த படங்களை காட்டும் போது குழந்தையின் கவனம் பிறரின் மேல் செல்லாமல் இருக்க தங்களையும், தங்களின் குழந்தையும் தவிர வேறு யாரும் அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • நாம் படம் பார்க்கலாமா என்று கூறியபடி கம்ப்யூட்டர்-ஐ on செய்யுங்கள். இவ்வாறு ஒவொரு தடவையும் செய்யும்போது குழந்தையீன் உற்ச்சாகம் பல மடங்கு அதிகரிக்கும்.

இந்த வீடியோக்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் முன்  அவற்றைப் பற்றி குழந்தையோடு குழந்தையாக  அமர்ந்து சிரித்துப் பேசுங்கள். தாங்கள் என்ன குழந்தைக்கு சொல்லிகொடுக்கப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள்.  குழந்தைகளுக்கு  எவ்வாறு விளக்கி சொல்ல வேண்டும் என்பது பற்றி கீழே கொடுத்துள்ள சில எடுத்துகாடுகளில் விளகியுள்ளேன். பின்னர் இவற்றை காண்பியுங்கள். பிறகென்ன உங்கள் குழந்தை பள்ளியில் முதலிடம் தானே.

நாங்கள் குறிபிட்டுள்ளது போல் ஒவ்வொரு தடவையும் குழந்தையை தங்களின் தொடை மேல் அமர்த்தி கொண்டு குழந்தையிடம் பேசுங்கள். எப்படி பேச வேண்டும் என்பதற்கு கீழே உள்ள video-களில் பேசியுள்ளதை பார்த்துப் பழகிகொள்ளுங்கள்.  மேலும் குழந்தை ஒரே நாளில் அறிவாளியாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எல்லா தலைப்புகளில் உள்ளதையும் ஒரே நாளில் காட்டாதீர்கள். 

ஒரு நாளைக்கு ஒரு தலைப்பு (முதல் நாள் வாகனங்களைப் பற்றி காண்பித்தால் மறுநாள் காய்கறிகளை பற்றி காண்பியுங்கள்.)  மட்டுமே காண்பிக்க வேண்டும். அபோழுது தான் அவ்விழயங்கள் குழந்தையின் ஆழ் மனதில் பதியும். தொடர்ந்து கற்று கொடுங்கள். தங்களின் குழந்தையை மேதைகளாக்குங்கள்.

வாழ்க வளமுடன். 

பிறந்த 6 மாதம் முதல் 1 வயது வரை:-   சில எடுத்துக்காட்டுக்கள்.

வாகனங்கள் - Vehicles:-


காய்கறிகள் - Vegetables:-

1 வயது முதல் 2 வயது வரை:-  சில எடுத்துக்காட்டுக்கள்:-


எண்கள் - Numbers:-

நாடுகளின் வண்ண கொடிகள் - Countries Flags:-

2 வயது முதல் 3வயது வரை:-  சில எடுத்துக்காட்டுக்கள்:-

வண்ணங்கள் - Colours:-

நாடுகளின் பெயர்கள் - Countries Names:-

நாடுகளின் உருவ அமைப்புகள் -Countries Shapes:-

3 வயது முதல் 5 வயது வரை:-  சில எடுத்துக்காட்டுக்கள்:-


ஆங்கில எழுத்துக்கள் - English Letters:-


ஆங்கில சொல்- English Word:-

நாங்கள் இங்கு சில தலைப்புகளில் சிலவற்றை மட்டும் காண்பித்து உள்ளோம்.மேலும் இந்த படங்களை ஒவ்வொரு தடவையும் ஒரே  வரிசையில் திரும்பத்  திரும்ப  காண்பிப்பதால் சில குழந்தைகள் மனப்பாடம் செய்து  ஒப்பித்து விட வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க  ஒவ்வொரு தடவையும் களைத்து மீண்டும் காண்பித்தால் இன்னும் வேகமான வளர்ச்சியை தங்களின் குழந்தையிடம் காணலாம். அவ்வாறு காண்பிப்பதன் மூலம் இந்த தடவை அம்மா என்ன காண்பிக்க போகிறார்கள் என்கிற ஆர்வமும் குழந்தையிடம் அதிகரிக்கும். இதன் மூலம் குழந்தையின் ஜாபக  சக்தியையும் வளர்க்க முடியும்.  இதன் படி முதல் நாள், இரண்டாவது நாள், மூன்றாவது நாள் என நாங்கள் கூறியுள்ளபடி மாற்றி மாற்றி காண்பிக்கவும். திரும்பவும் முதல் நாள், இரண்டாவது நாள் என மாற்றி மாற்றி காண்பிதத்துவர அவர்களின் உன்னித்து கவனிக்கும் திறன் வளர்ந்து   விரைவில் நீங்கள் படங்களை காண்பித்தவுடன், அது என்ன என்று கூறும் அறிவுத் திறனை குழந்தை பெறுவான். இதை அனுபவ பூர்வமாக உணர கண்டிப்பாக தினமும் குறைந்தது 3 முறையாவது காண்பிக்கவும்.வேலைக்கு செல்பவர்கள் மாலையில் குழந்தையுடன் விளையாடும் போது குறைந்தது 30 நிமிடங்கள் இடைவெளியில் 3 முறையாவது காண்பிக்கவும். நிச்சயம் தங்களின் குழந்தை வருங்கால நட்சத்திரமாவான்.

பிறந்த 6 மாதம் முதல் 1 வயது வரை 

1 வயது முதல் 2 வயது வரை 

2 வயது முதல் 3 வயது வரை

3 வயது முதல் 5 வயது வரை


மேலும் இவை போல் விரிவான பயிற்சிகளை பற்றி அனைத்தையம் அறிந்து கொள்ள அணுகவும்  e -mail விலாசம்

natchatthiriangal@gmail.com

செல்பேசி எண் - 91769 67377

இவற்றை தாங்கள் அனுபவிப்பதோடு பிறருக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயன் பெற வேண்டுகிறோம். மேலும் தங்களின் மேலான கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன.

வாழ்க வளமுடன்

மேலும் தங்களின் பெயர் குழந்தை வளர்ப்பில் டிப்ஸ் பகுதியில் இடம் பெற தங்களுடையமேலான, அனுபவபூர்வமான, சிறந்த, உபயோகமுள்ள பல டிப்ஸ்-களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை மற்றவர்களுக்கும் பயன் அளிக்கும் அல்லவே? டிப்ஸ் தெரிவிக்க வேண்டிய முகவரி 

natchatthirangal@gmail.com

வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை: