கேள்வி-பதில் பகுதி

நாம் என்ன தான் விரிவான விளக்கங்கள் கொடுத்தாலும் சுருக்கமாக சில கேள்வி பதில் மூலம் விளக்கினால் அது எளிதில் அனைவருக்கும் விளங்கிவிடும்.  இதன் காரணமாகவே இந்த பகுதியை நாம் ஆரம்பித்து இருக்கிறோம்.மேலும்   இந்தப் பகுதியில் தாங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும்  தகுந்த பதில்கள் மற்றும் விரிவான பதில்கள்  அளிக்கப்படும். உங்கள் சந்தேகங்களை எங்களுக்கு தயங்காமல் எழுதி அனுப்பலாம். மேலும் தங்களின் கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யலாம். தாங்கள் எழுதி அனுப்பவேண்டிய முகவரி

natchatthirangal@gmail.com

வாழ்க வளமுடன் 


நம் குழந்தைகளை எதிர்காலத்தில் வல்லவர்களாக, நட்ச்சத்திரங்களாக மாற்ற ஒரு கட்டிடத்தின் அடித்தளம் எப்படி உறுதியாக அமையவேண்டுமோ அது போல குழந்தையின் முதல் 5 வயது மிகவும் முக்கியமானது. இந்த வயதில் அவர்களை அறிவாளிகளாக மாற்ற அடித்தளம் அமைக்க வேண்டும். இதற்காக சில பயிற்சிகளை இந்த வலைதளத்தின் பயிற்சிகள் பக்கத்தில் கொடுத்துள்ளேன். இவை பற்றிய விரிவான பயிற்சியை பெற அணுகவேண்டிய முகவரி

natchatthirangal @gmail.com மற்றும் செல்பேசி எண் - 91769 67377

வாழ்க வளமுடன் 

Q  :  நான் தூத்துக்குடியில் இருந்து பேசுகிறேன். என் குழந்தை மிகவும் ஒல்லியாக இருக்கிறாள் என்ன செய்யலாம். நான் வேலைக்கு செல்வதால் அவளிடம் அதிக நேரம் செலவழிக்க இயலவில்லை. உதவி செய்யுங்கள் ப்ளீஸ்?

A  :  ஒல்லியாக இருப்பது கவலைப்பட வேண்டிய விழயம் இல்லை. குழந்தை சுறுசுறுப்பாக இருப்பதும் தினமும் மலம் மற்றும் சிறுநீர் சரிவர கழிப்பதும் தான்  மிகவும் முக்கியம்.

ஆனால் நம் குழந்தை புழ்டியாக பார்க்க அழகாக இருந்தால் நமக்கு மேலும் சந்தோழம் தானே. இதற்கு தினமும் காலை குழந்தை எழுந்தவுடன் சிறிது நெய்யுடன் சர்க்கரை சேர்த்து குழந்தையின் நாக்கில் தடவி வரவும். இவ்வுணவு குழந்தையின் உடல் உழ்னத்தை குறைத்து உடல் எடை கூட உதவும்.

மேலும் தானியங்கள் (கோதுமை, வரகு, கொள்ளு, கேழ்வரகு, உடைத்தகடலை, வேர்கடலை, மக்காச்சோளம், கம்பு, அரிசி இவற்றில் அனைத்தையும் அல்லது ஒரு சிலவற்றையும் சமபங்கு எடுத்து உடைத்தகடலை தவிர்த்து மீதமானவற்றை வறுத்து பின்னர் அனைத்தையும்  மாவாக தனித்தனியே அரைத்து பின்னர் ஒன்றாக கலந்து கொள்ளவும்.கொள்ளவும். இந்த மாவை கஞ்சி வைத்து குழந்தையின் விருப்பம் போல் வெல்லமோ அல்லது உப்போ கலந்து தினமும் கொடுத்து வந்தால் விரைவில் குழந்தையின் உடல் எடை கூடும்.

Q  :   என் நேம் சித்ரா. என் பெண் குழந்தை பெயர் இனியா. அவளுக்கு 2 வயது 10 மாதம் ஆகிறது. இன்னும் சரியாக பேச ஆரம்பிக்கவில்லை. அவள் play school-க்கு போகிறாள். அவள் பயபடுகிறாள். எப்படி சரி செய்வதென்று தெரியவில்லை. நானும் அவளிடம் அதிகம் பேசுவேன். ப்ளீஸ் உதவி செயுங்கள்.

A   :  என் இனியாவுக்கு என் இனிய முத்தங்கள். இனியா சரியாக பேசவில்லை என்று சொல்வதன் மூலம் அவள் பேசுகிறாள் என்று தெரிகிறது.  நீங்கள் தினமும் நம்முடைய வலைதளத்தில் உள்ள பயிற்சிகளை 6 மாதம் முதல் 3 வயதிற்கு மேல் அனைத்தையும் முதல் நாள், இரண்டாவது நாள், என்று திரும்ப திரும்ப  ஒரு தலைப்பு(மட்டும் ) என்று கான்பித்துவர விரைவில் இனியா நன்றாக பேசுவாள். மேலும் விரிவான பயிற்சி தேவைப்படின் மீண்டும் எ-மெயில் செய்யவும்.

நீங்கள் அடுத்து கேட்டது அவள் பயபடுகிறாள் என்று. முதலில் அவள் பயபடுகிராளா அல்லது வெட்கபடுகிராளா என்று கவனிக்கவும். இன்னும் சரியாக பேச ஆரம்பிக்கவில்லை என்பதால் தயக்கம் காரணமாக கூட  அவள் ஒளியக்கூடும். கவனியுங்கள்.தவறுதலாக புரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.. வெட்கப்படுகிறாள் என்றால் அவள் தயக்கத்தைப் போக்கி சகஜமாக பேச அவலுடன் பேசி புரியவைக்க முயற்சியுங்கள். விளையாடிகொண்டே பேசுங்கள். அவளுக்கு பிடித்தமான செயல்களை செய்யும்போது பேசுங்கள். அவள் நன்றாக பேச ஆரம்பித்தால் தயக்கமும் தானே தெளியும்.

நீங்கள் சொல்வது போல் அது பயமாக இருந்தால் அவள் எதற்காக பயப்படுகிறாள் என்று அறிந்து அவள் விளையாடும் போதோ அல்லது தங்கள் குழந்தையை தூங்க வைக்கும் போதோ அப்படி பயப்படவேண்டியது இல்லை (பூச்சியால் பயந்தால் அந்த பூச்சி கடிக்காது, அப்படி கடித்தாலும் ஒன்றும் ஆகாது) என்பது போல் தைரியமான் வார்த்தைகள் கூறி வரவும், விரைவில் பலன் தெரியும்.

குழந்தை விரைவில் நன்றாக பேச கண்டிப்பாக எங்களின் பயிற்சியை தினமும் மும்முறை கொடுக்கவும். விரிவான பயிற்சி தேவைப்படின் மீண்டும் e-mail எழுதவும்.

Q :  எனது சித்தி குழந்தை 2 வயதாகியும் இன்னும் நன்றாக பேசவில்லை.  என்ன செய்யலாம்?

A :  தங்கள் சித்தி குழந்தைக்கு காத்து நன்றாக கேட்கும் பட்சத்தில் பயப்பட ஒண்டும் இல்லை. குழந்தை விரைவில் பேச நன்றாக பேச அவடுடன்/அவளுடன் அதிகம் பேசுங்கள். குழந்தை திரும்ப பதில் பேசவில்லை என்று கவலைப்பட வேண்டியது இல்லை.  மேலும் எண்களின் பயிற்சிகளையும் அளியுங்கள் தங்களின் சித்தி குழந்தை பேசுவதை நிறுத்த மாட்டானா என்று நீகள் அலுத்துக் கொள்ளும் அளவுக்கு பேச ஆரம்பித்துவிடுவான்.

Q:  எங்களுக்குத்  தேவையான விரிவான பயிற்சிகள் கிடைக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

A :  நாங்கள் மேலே குறிபிட்டுள்ள e - mail விலாசத்தை தொடர்பு கொள்ளவும் 

Q:எங்கள்  பக்கத்து வீட்டுப் பையன் 2 வயதாகியும்  நாங்கள் என்ன பேசினாலும் சைகையினாலேயே பதில் கூறுகிறான். மருத்துவர்கள் அது ஒரு குறை இல்லை என்று கூறினாலும் 2 வயதாகியும் பேசாமல் இப்படி சைகையினாலேயே பேசுவது வருத்தமாக உள்ளது. என்ன செய்யலாம்?

A :  அவன் சைகையினாலயே பதில் சொல்கிறான் என்றால் அவனுக்கு நீங்கள் பேசுவது புரிகிறது, காத்து நன்றாக கேட்கிறது என்று அர்த்தம். அதனால் ப்பயப்படத் தேவையில்லை. அனால் நீங்களாகவே அவனுக்கு சைகை தான் புரியும் என்று தப்பு கணக்கு போட்டுக் கொண்டு சைகையினாலேயே பேசினால் அவன் அப்படிதான் பேச வேண்டும் என்று நினைத்து அப்படியே பழகிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் அவனிடம் யார் பேசினாலும், அவன் சைகியிலயே பதில் சொன்னாலும் நீங்கள் அவனிடம் வாய் மொழியாக மட்டுமே பதில் அளிக்க வேண்டும்.  மேலும் எண்களின் பயிற்சிகளையும் அளித்து அவனிடம் உரக்க கூற வேண்டும் எண்டு கூறுங்கள்.  இதனால் அவன் பேசும் திறன் அதிகரிக்கும். அவனும் இப்படி சத்தம் போட்டுத் தான் பேச வேண்டும் என்பதை உணர்ந்து பேச ஆரம்பிப்பான்.

Q :  என் குழந்தைக்கு 1 வயது முடிந்துள்ள நிலையில் அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்.?

A : நீங்கள் தாய்ப்பால் இன்னும் கொடுப்பவராக இருந்தால் அதை நிறுத்த வேண்டா. இந்த வயதில் தாய்பால் என்பது வெறும் நொறுக்குத் தீனி போன்றது தான். அதனால் அவன் தான் என்னிடம் பால் குடிக்கிறானே என்று சாப்பாட்டை குறைக்க வேண்டாம். குழந்தை போதும் என்று சொல்லும் வரை உணவு கொடுக்கலாம். மேலும் இந்த வயதில் எல்லா உணவுகளையும் அறிமுகபடுத்தலாம். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மதிய உணவில், அதிகம் காய்கறிகளுடன் சிறிது அரிசி சாதத்தையும் கலந்து கொடுங்கள். இதை என் சொல்கிறேன் என்றால் பல தாய்மார்கள் வயிறு நிரம்ப வேண்டும் என்பதற்காக சாதத்தை குழைய பிசைந்து  அதிகம ஊட்டிவிடுவார்கள். இதனால் காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ள முடியாமல் போய்விடும். பின்னலிலும் குழந்தை இதையே பின்பற்றும். இதனால் சிறு வயதிலேயே காய்கறிகளை அதிகள் சேர்க்க பழகுங்கள். ஒரு நாளைக்கு 7 தடவை குழந்தை சாப்பிடும் படிப் பார்த்துகொள்ளுங்கள். 3 வேலை உணவு மட்டற்ற நேரங்களில் பால் மற்றும் பழங்கள் சாப்பிடும்படி பார்த்துகொள்ளுங்கள். 

இவற்றை தாங்கள் அனுபவிப்பதோடு பிறருக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயன் பெற வேண்டுகிறோம். மேலும் தங்களின் மேலான கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன.

வாழ்க வளமுடன்

மேலும் தங்களின் பெயர் குழந்தை வளர்ப்பில் டிப்ஸ் பகுதியில் இடம் பெற தங்களுடையமேலான, அனுபவபூர்வமான, சிறந்த, உபயோகமுள்ள பல டிப்ஸ்-களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை மற்றவர்களுக்கும் பயன் அளிக்கும் அல்லவே? டிப்ஸ் தெரிவிக்க வேண்டிய முகவரி 

natchatthirangal@gmail.com

வாழ்க வளமுடன்